Thursday, 11 February 2016

Paathuteangala visarani padatha? பாத்துட்டீங்கலா விசாரணை படத்த ?

எனக்கு வெற்றிமாறன் படம்னா இஷ்டம், அவருடைய பொல்லாதவன், ஆடுகளம் படங்களை பலமுறை பார்த்ததுண்டு. வெற்றிமாறன் ஆடுகளம் படத்திற்காக மதுரையில் தங்கி, மதுரை பழக்க வழக்கங்களை கற்றாராம் (படித்தது)

சரி விஷயத்துக்கு வருவோம், விசாரணை படம் பார்த்தவர்களுக்கு தெரியும், படம் ஆரம்பமுதல் முடிவுவரை அடி உதை, காவல் நிலையம். காதலுக்கும், பாட்டிற்கும் படத்தில் வேலை இல்லை. ஆரம்பத்தில் ஒருசில காதல் காட்சிகள் இருந்தாலும் அது ஒரு 5 நிமிட காட்சிகளே, டைரக்டர் சார்க்கு நன்றி :), ஒரு காட்சியில் ஹீரோஇன் தெலுங்கில் பேசுவார் ஆனா அதா translate பண்ணி தமிழுல போடல, ஹ்ம்ம் ஹீரோ தினேஷ்கும் அது புரியாது, ஹீரோகே புரியல அப்புறம் ஏன் audience கு புரியணும்னு  வெற்றிமாறன் நினைத்திருக்கலாம். அப்டியா?

ஆனா இப்டிலாம் நடந்திருக்கா? அப்பா சாமி நு இருக்கு.

4 பேர் போலீசாரிடம் மாட்டிகொள்கிறார்கள், அப்படி மாட்டிக்கொண்டால் இதுதான் நடக்கும் என்று சொல்வது போல் இருக்கும் படம், போதுவாக துணை/ உறவுகள்/ பெரிய வட்டராம் இல்லாதவர்களை தான் ஒரு திருடன் தேர்ந்தெடுத்து திருடுவான்,  முதலாளிகள் ஏமாற்றுவர், இது காவல் துறைக்கும் பொருந்தும் என்று படம் காட்டுகிறது.

அட்டகத்தி தினேஷ், ஆடுகளம் முருகதாஸ் நடிப்பு பிரமாதம்.

கட்டி வைத்து அடிப்பது, கவ்வ விட்டு அடிப்பது, shoe அடி, மர பட்டை  அடி, லத்தியடி என பல கோணங்களில் சித்திரவதை காட்சிகளை படமாக்கிஉள்ளனர். இவ்ளோ நடந்தாலும் ஒரு சில நகைச்சுவை காட்சிகளும் வருது.

டோன்ட் மிஸ் திஸ் பிலிம்.

ஆல் தி பெஸ்ட் டைரக்டர் சார்.





No comments:

Post a Comment