தினமும் நாம் தொலைகாட்சியை பார்க்கும் போதும் ஏதாவது ஒரு விவாதம் போய்க்கொண்டு தான் இருக்கிறது. எந்த செய்தி சேனல்களை பார்த்தாலும் யாரையாவது ஒரு நாலு பேரை உட்கார வைத்து வாக்குவாத நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்
ஒருவர் ஒரு நல்ல காரியத்தை செய்தால் கூட அதை அலசி ஆராய்ந்து விடுகிறார்கள், அவர் ஏன் செய்தார் ? எதற்கு செய்தார் ? என்று ஒரே கலேபரியாக இருக்கிறது , இப்படி செய்வதால் ஒருவன் நல்லது பண்ண நினைத்தாள் கூட பண்ணமாட்டார்.
தொலைகாட்சி ஊடகங்களுக்கு வேறு வேலை இல்ல போலும்
ஏதாவது ஒரு சின்ன விஷயம் என்றால் போதும் அணைத்து தொலைகாட்சி சேனல்களும் அங்கே படை எடுக்கின்றன, இதை தப்பு என்று சொல்லவில்லை, ஆனால் நல்ல பயனுள்ள செய்தியை ஒளிபரப்புவது இல்லை, ஓரிரு தொலைகாட்சிகள் மட்டுமே ஒளிபரப்புகிறது
- மாணவர்களுக்கு பாடம் சம்மந்தமாக ஒரு நல்ல நிகழ்ச்சியை போடலாம்
- என்ன அரசு வேலை வாய்ப்புகள் இருக்கிறது அதற்கு என்ன பண்ணலாம்
- ஒரு ஒழுக்கமான பயனுள்ள கருத்துகளை சொல்லலாம்
- நமது பாரம்பரியம், கிராமிய செய்திகள் ????
நான் காணும் 90% தொலைகாட்சிகள் அனைத்தும்
- இவன் அவனை கொன்றான்
- இவள் 2டாம் முறை திருமணம் செய்தால்
- விபசார செய்திகள் - அதுவும் மிக ஆழமாக ஆராய்ந்து சொல்லுதல்
- இந்த அரசியல் பிரமுகர் அங்கே ஏன் சென்றார்?
- இப்போது எந்த நடிகர் சூப்பர் ஸ்டார்
- கள்ள காதல், லஞ்சம்
ஆனால் ஒரு நல்ல விசயத்தை குறுகிய செய்தி பிரிவில் காட்டுகிறார்கள்
தயவு செய்து உங்கள் பிள்ளைகளை வைத்துக்கொண்டு இந்த வகையான சேனல்களை பார்க்க வைக்க வேண்டாம்.
ஒரு கொலை, விபசார செய்தியை சொல்வதற்கு 1 மணி நேரமா ? அதுவும் காவல் துறையை விட ஒரு படி மேலே போய் அந்த அசிங்கம் புடித்த சம்பவத்தை ஆராய்ந்து சொல்லுதல்.
அரசியல், விளையாட்டு, சினிமா, உருளை கிழங்கு எவ்வளவு? மட்டும் செய்தி அல்ல
உங்கள் பிள்ளைகளுக்கு "அனிமல் பிளானெட்","தமிழ் டிஸ்கவரி "போன்ற நல்ல, அறிவு வளர்ச்சியை சார்ந்த நிகழ்ச்சியை போட்டு காட்டவும், நீங்களும் இந்த அசிங்கம் புடித்த சேனல்களை பார்க்காமல் இருப்பது நல்லது
No comments:
Post a Comment