Friday, 24 October 2014

பாசில் சாரை தெரியுமா உங்களுக்கு ? - Fazil the Director

பாசில் சாரை தெரியுமா உங்களுக்கு ? நான் ரசித்த படங்களில் இவருடைய படங்களும் அடங்கும். நல்ல கதை, நல்ல திரைக்கதை, நல்ல நடிகர்களின் தொகுப்பு இவரின் தனி அம்சம்




பூவே பூச்சூட வா, வருஷம் பதினாறு, அரங்கேற்ற வேலை, காதலுக்கு மரியாதை போன்ற படங்கள் மெகா ஹிட்டை கொடுத்தவை , கேரள மாநில இயக்குனராக இருந்தாலும் தமிழ் படங்களை அற்புதமா கொடுத்தவர்.

அணைத்து படங்களிலும் இளையராஜா சார் தன் மியூசிக், கேட்கவா வேணும்? அப்படி ஒரு அற்புதமான இசை, பாடல்.

பூவே பூச்சூட வா - படம் ஒரு பேத்திக்கும், பாட்டிக்கும் உள்ள பந்தத்தை பற்றியது. மிக வித்தியாசமான படைப்பு, இனி அப்படி ஒரு படம் வராது !!!!


எனக்கு இந்த படத்தில் இந்த பாடல் வரிகள் ரொம்ப பிடிக்கும் , வைரமுத்துவின் வரிகள் + இளையராஜா சார்


அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும் ஓடி நான் வந்து பார்ப்பேன்
தென்றல் என் வாசல் தீண்டவே இல்லை கண்ணில் வெந்நீரை வார்ப்பேன்
கண்களும் ஓய்ந்தது ஜீவனும் தேய்ந்தது
ஜீவ தீபங்கள் ஓயும் நேரம் நீயும் நெய்யாக வந்தாய் 
இந்த கண்ணீரில் சோகம் இல்லை இன்று ஆனந்தம் தந்தாய்
பேத்தி என்றாலும் நீயும் என் தாய்

காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும் பாசம் வெளுக்காது மானே
நீரில் குளித்தாலும் நெருப்பில் எறிந்தாலும் தங்கம் கருக்காது தாயே
உன் முகம் பார்க்கிறேன் அதில் என்முகம் பார்க்கிறேன்
இந்த பொன்மானை பார்த்துக்கொண்டே சென்று நான் சேர வேண்டும்
மீண்டும் ஜென்மங்கள் மாறும்போதும் நான் உன் மகளாக வேண்டும்


ஆஹா என்ன ஒரு அற்புதமான பாடல்


நீங்கள் 80களில் பிறந்திருந்தால் காதலுக்கு மரியாதை படத்தின் தாக்கம் புரிந்திருக்கும் , எந்த படம் வருகிறதோ அந்த படத்தின் தாக்கம் ரசிகர்களின் மத்தியில் இருக்கும் "நல்ல படமாக இருந்தால் " !.

அப்படி புரட்சி செய்த படம் தான் காதலுக்கு மரியாதை. ஷாலினியின் காலேஜ் லுக் அணைத்து பெண் ரசிகர்களையும் கவர்ந்தது, அந்த காலத்தில் காலேஜ் படித்த பெண்கள் அனைவரும் அவரை போன்றே புத்தகங்களை கையில் கொண்டு சென்றார்கள்.

விஜயின் கிருதா ஸ்டைல், குவாலியர் கிட்டிங், காலர் பட்டன், ஹீரோ ஹோண்டா பைக், கழுத்து செயின் ரொம்ப பேமஸ்.




இப்போ இந்த மாதிரிலாம் படம் வருவது ரொம்ப கஷ்டம்... ஓல்ட் இஸ் கோல்ட் 

தயாராகிக்கொண்டு இருக்கும் கருப்பு பண பதுக்கல் ஆசாமிகளின் பட்டியல்

இந்த புதிய இந்திய அரசு பல முயற்சிகள் செய்து வெளிநாட்டு வங்கிகளில் இந்திய மக்கள் வைத்துள்ள கருப்பு பண கணக்குகளை சேகரிதுள்ளது, வரும் வாரம் அதின் ஒரு பகுதியை வெளியட உள்ளது . பார்க்கலாம் யார் யாரின் பெயர்கள் அதில் இருக்கும் என்று !!!


இப்படி கருப்பு பணங்களை மீட்டுவதன் மூலம், நாம் அரசிடம் இருந்து சில வரி சலுகைகளை பெற வாயப்புள்ளது , இப்படி அரசிற்கு போக வேண்டிய பணங்கள் அனைத்தும் வெளிநாட்டில் பதுக்கபட்டு இருக்கிறது






அரசு னா ?? மக்கள் தான். ஓஹ அப்ப இதெலாம் நம்ம பணம்


நம்ம கட்டுற வரிகள் வீடு வரி, குழாய் வரி, மின்சார வரி, வருமான வரி மேலும் பல அரசிற்கு தான் போகுது, இப்படி சில அரசியல் வாதிகள் ஊழல் செய்த பணங்களை யாருக்கும் தெரியாமல் வெளிநாட்டில் பதுகுவதன் மூலம் நாம் இந்த வரிகளை கூடுதலாக செலுத்த வேண்டிய நிலைமை இருக்கிறது


சார் சிங்கபூர்ல வரி கட்டவே தேவை இல்லையாமே கரெக்டா ? 


மாசம் நம்ம வாங்குற சம்பளத்துல ஒரு பங்கு இந்த வரிகளுக்கே போகுது. இதுக்கெல்லாம் விடுவு காலம் வருமா?

நீங்களும் இந்த அசிங்கம் புடித்த சேனல்களை பார்க்காமல் இருப்பது நல்லது





தினமும் நாம் தொலைகாட்சியை பார்க்கும் போதும் ஏதாவது ஒரு விவாதம் போய்க்கொண்டு தான் இருக்கிறது. எந்த  செய்தி சேனல்களை பார்த்தாலும் யாரையாவது ஒரு நாலு பேரை உட்கார வைத்து வாக்குவாத நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்

ஒருவர் ஒரு நல்ல காரியத்தை செய்தால் கூட அதை அலசி ஆராய்ந்து விடுகிறார்கள், அவர் ஏன் செய்தார் ? எதற்கு செய்தார் ? என்று ஒரே கலேபரியாக இருக்கிறது , இப்படி செய்வதால் ஒருவன் நல்லது பண்ண நினைத்தாள் கூட பண்ணமாட்டார்.

தொலைகாட்சி ஊடகங்களுக்கு வேறு வேலை இல்ல போலும்

ஏதாவது ஒரு சின்ன விஷயம் என்றால் போதும் அணைத்து தொலைகாட்சி சேனல்களும் அங்கே படை எடுக்கின்றன, இதை தப்பு என்று சொல்லவில்லை, ஆனால் நல்ல பயனுள்ள செய்தியை ஒளிபரப்புவது இல்லை,  ஓரிரு தொலைகாட்சிகள் மட்டுமே ஒளிபரப்புகிறது



  • மாணவர்களுக்கு பாடம் சம்மந்தமாக ஒரு நல்ல நிகழ்ச்சியை போடலாம்
  • என்ன அரசு வேலை வாய்ப்புகள் இருக்கிறது அதற்கு என்ன பண்ணலாம்
  • ஒரு ஒழுக்கமான பயனுள்ள கருத்துகளை சொல்லலாம்
  • நமது பாரம்பரியம், கிராமிய செய்திகள் ????


நான் காணும் 90% தொலைகாட்சிகள் அனைத்தும்


  • இவன் அவனை கொன்றான்
  • இவள் 2டாம் முறை திருமணம் செய்தால்
  • விபசார செய்திகள் - அதுவும் மிக ஆழமாக ஆராய்ந்து சொல்லுதல்
  • இந்த அரசியல் பிரமுகர் அங்கே ஏன் சென்றார்?
  • இப்போது எந்த நடிகர் சூப்பர் ஸ்டார்
  • கள்ள காதல், லஞ்சம்


ஆனால் ஒரு நல்ல விசயத்தை குறுகிய செய்தி பிரிவில் காட்டுகிறார்கள்

தயவு செய்து உங்கள் பிள்ளைகளை வைத்துக்கொண்டு இந்த வகையான சேனல்களை பார்க்க  வைக்க வேண்டாம்.

ஒரு கொலை, விபசார செய்தியை சொல்வதற்கு 1 மணி நேரமா ? அதுவும் காவல் துறையை  விட ஒரு படி மேலே போய் அந்த அசிங்கம் புடித்த சம்பவத்தை ஆராய்ந்து சொல்லுதல்.

அரசியல், விளையாட்டு, சினிமா, உருளை கிழங்கு எவ்வளவு?  மட்டும் செய்தி அல்ல 

உங்கள் பிள்ளைகளுக்கு "அனிமல் பிளானெட்","தமிழ் டிஸ்கவரி "போன்ற நல்ல, அறிவு வளர்ச்சியை சார்ந்த நிகழ்ச்சியை போட்டு காட்டவும், நீங்களும் இந்த அசிங்கம் புடித்த சேனல்களை பார்க்காமல் இருப்பது நல்லது 


Monday, 6 October 2014

இந்தியா - உலகின் நான்காவது மிக பெரிய மற்றும் சக்தி வாய்ந்த இராணுவம்

உலகின் நான்காவது மிக பெரிய மற்றும் சக்தி வாய்ந்த இராணுவ படையை கொண்டுள்ளது இந்திய

இந்த நிதியாண்டில் இந்திய 30,000 ஆரியம் கோடி ரூபாயை இராணுவ முன்னேற்றத்திற்காக பயன் படுத்துகிறது

16,000 நில வாகனங்கள், 3,500 டாங்கிகள் மற்றும் 1.785 விமானங்களை கொண்டுள்ளது இந்திய இராணுவம்

கிட்டத்தட்ட 3.5 மில்லியன் அதாவது 30 லட்க்ஷம் வரை இந்திய படை வீரர்கள் பணி புரிகின்றனர்



இந்திய இராணுவ மிகுதியான, மற்றும் பலமான நாடக திகழ்கிறது

இந்த காரணலதிலேயே  அமெரிக்க மற்றும் ரஷ்ய ஆகிய நாடுகள் இந்தியாவிடம் நல்ல நட்புறவை கொண்டிருகிறது.


மற்ற சக்தி வாய்ந்த இராணுவ பட்டியலில்

சீனா 3 வது இடம்
ரஷ்ய 2 வது இடம்
அமெரிக்க 1 வது இடத்தை புடித்துள்ளது


அனால் இந்திய தனது இராவுண உபகரணங்களை அமெரிக்க, மற்றும் ரஷ்ய விடம் இருந்து வங்கி வருகிறது

அமெரிக்க உலகின் இவ்வளவு  பெரிய வல்லரசாக இருப்பதற்கு இது ஒரு காரணம், ஏனென்றால் அவர்கள் இராவுண உபகரணங்களை தயாரிப்பதில் வல்லவர்களாக இருக்கிறார்கள். அமெரிக்க இப்படி இராவுன உபகரணங்களை
விற்பதன் மூலம் பெரும் தொகையை ஈட்டுகிறது

இந்தியா தனது இராவுன உபகரணங்களை நம் நாட்டிலேயே தயாரித்தால் இன்னும் நன்றாக இருக்கும்