Friday, 19 September 2014

கோஜி "Goji" - உலகத்தில் எந்த மூலையில் இருந்தும் உங்கள் வீட்டின் கதவை கண்ட்ரோல் செய்யலாம்

கோஜி  "Goji" - உலகத்தில் எந்த மூலையில் இருந்தும் உங்கள் வீட்டின் கதவை கண்ட்ரோல் செய்யலாம்


கோஜி  ஒரு ஏலேக்ட்ரோனிக் பூட்டு, இது மொபைளுடன் இனைந்து செயல் படும். ஒருமுறை கோசி ஆப்பை-app அக்டிவேட் செய்தால் போதும், மொபைளுடன் வீட்டின் முன் வந்து நின்றால் போதும், ஆடோமாடிக்காக கதவு திறக்கும், மொபைலை  எடுக்கவோ, ஏதேனும் பட்டனை கிளிக் செய்யவோ தேவை இல்லை




சரி நாம் வெளி ஊருக்கு சென்று விட்டோம், நம்முடைய அம்மாவோ அப்பவோ வீட்டிற்கு வந்தால் என்ன செய்வது? கவலை இல்லை, உலகத்தில் எங்கு இருந்து கொண்டும் நாம் பிறர் மொபைலுக்கு
அச்செஸ் கொடுத்தால் போதும் (SMS மூலமாக) அவகளுக்கு கதவு ஓபன் ஆகிவிடும்



அம்மா 1 நாள் தான் இருப்பார் என்றல் அவருடைய மொபைலுக்கு 1 நாள் அச்செஸ்/permission கொடுக்கும் வசதி உண்டு. சோ ஒரு மொபைலுக்கு ஏத்தனை நாள், எவளவு நேரம் கதைவை திறக்கும் அணுகலை கொடுக்கலாம் என்று நாம் செட் பண்ணிக்கொள்ளலாம்.
நம்மை தவற நம்முடைய அனுமதி பெற்று வேறொருவர் நம்முடைய கதவை திறந்தால் அவரின் புகை படம் நமக்கு வந்துவிடும்.



புகுபதிகை / Log முறையும் இதில் உண்டு - சோ நீங்கள் உங்கள் கதவை எப்பொழுது திறந்தீர்கள் என்ற அட்டவணை உங்களுக்கு தேதி, மணியோடு பார்த்துகொள்ளலாம்.



மேலும் வந்திருக்கும் நபரின் பெயரை அதின் காட்சியில் தெரியும்.



நாங்கள் எந்த பூட்ட போட்டாலும் உடைபோம்ல.



இணையதளம்: http://www.gojiaccess.com/

வயர் இல்லாமல் கணினியை உங்கள் டிவி யோடு இணைக்கலாம்: இயர் டைம் "AIRTAME"

வயர் இல்லாமல் கணினியை உங்கள் டிவி யோடு இணைக்கலாம்: இயர் டைம் "AIRTAME"

HDMI - என்றால் என்ன? ஹை டெபினிசன் மல்டிமீடியா இன்டர்பேஸ், அப்டினா? ஓகே ஒரு சாதனத்தில் இருக்கும் ஒலி (ஆடியோ) மற்றும் ஒளி (வீடியோ) வை இன்னொரு சாதனத்துடன் இனைக்க பயன்படும்
ஒரு வயர் போன்ற கருவி தான் HDMI, உங்கள் வீட்டில் லேட்டஸ்ட் technology உள்ள ஒரு டிவி யோ, அல்லது DVD player ரோ வைத்திருந்தால் அது HDMI யை சப்போர்ட் செய்யும்.

இந்த மாதிரி உங்கள் சாதனத்தின் பின்புற போர்டில் இருந்தால் அது HDMI சப்போர்ட் செய்யும்.




சரி இத வச்சு நா என்ன ஜீ பண்றதுன்னு தான கேட்குறீங்க?. உங்கள் லாப்டோபையோ, உங்கள் கம்புடரையோ, அல்லது உங்கள் மொபைல் லையோ உங்கள் TV யோடு இன்னைத்துகொள்ளலாம்.

இணைப்பதன் மூலம் உங்கள் லேப்டாப் காட்சி உங்கள் TVல் அப்படியே தேறியும், சோ லேப்டாப்'ள படம் பாக்குறது பதில ஒரு HDMI போர்ட் பயன் படுத்தி உங்க TVல் பாக்கலாம்

ஒரு வேல நீங்க உங்க வீட்ல ஒரு 24 இன்ச் டிவி வச்சுருந்தா அதுல கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடும் தரம் நன்றாக இருக்கும். இப்ப latesta வர்ற HDMI 3D லாம் சப்போர்ட் பண்ணுது..

சரி இப்ப மேட்டர்க்கு வருவோம், இந்த HDMI ஒரு "வயர் கனெக்சன் கேபிள் தான்" சோ ஒரு 100 CM வரை தான் பயன் படுத்தமுடியும், அதாவது நீங்கள் கனெக்சன் செய்யும்  கருவி 100 சென்டிமீட்டர் அருகில் தான் இருக்க வேண்டும், ஏனென்றால் அளவு பத்தாது கரெக்டா? ஓகே இப்ப இத சரி கட்ட தான்  "AIRTAME" வந்துருக்கு

வயர் யில்லாமல் ஒரு பென்றைவ் போல உங்கள் TVல் மாட்டிக்கொள்ள வேண்டியது தான்.


சரி எப்படி இது வொர்க் ஆகும், ?

இந்த AIRTAME ஒரு installation "நிறுவல்" யோடு வரும், சோ உங்கள் லேப்டாப்'ல இதை இன்ஸ்டால் செய்து கொள்ளவேண்டும்.

பின்பு உங்கள் லேப்டாப்பில் செட் செய்து கொள்ளலாம். இதன் மூலம் நாம் ஒரு கம்புடேரை இன்னொரு கம்புடேரோடு இணைக்க முடியும்











இணையதளம்: https://airtame.com


Friday, 5 September 2014

தானாக லைட், டிவி, ON ஆகிவிடும் - இயர்-பை / Airfy Iphone app and device

இயர்-பை / Airfy

ஒரு எலுமிச்சை அளவே இருக்கும் கருவி, இந்த கருவி  Iphone app போடு சேர்ந்து செயல்படும்

இதன் மூலம் உங்கள் வீட்டில் இருக்கும் அணைத்து எலேக்ட்ரோனிக் டிவைஸ்களை கண்ட்ரோல் பண்ணலாம்,அணைத்து கன்றோளையும் உங்கள் மொபைல் appல் செட் செய்து கொள்ளலாம்.





நீங்கள் ரூமுக்குள் போகும் பொது தானாக லைட், டிவி, ON ஆகிவிடும், நாம் ரூமை விட்டு வெளியே வந்தவுடன் OFFஆகிவிடும்.


"நான் சமையலறைக்குள் நுழைந்தவுதன் மைக்ரோ ஓவனை ON செய்", என்று உங்கள் மொபைல் appல்  செட் செய்தல் போதும் அனைத்தையும் இந்த கருவி பார்த்துக்கொள்ளும்


உதாரணத்திற்கு தேர்வு நாளில் நீங்கள் டிவி-ல் கிரிக்கெட் பார்த்துகொண்டு இருக்குறீர்கள், உங்கள் அப்பா வந்துவிடுகிறார், கிரிக்கெட் பார்த்தால் அவர் திட்டுவார் அதலால் அப்பா வந்தால் டிவி - யை ஆப் செய்துவிடு என்று செட் செய்துகொள்ளலாம் 


இந்த  கருவிகள் அனைத்தும் ப்ளூ டூத் மூலம் செயல்படுகிறது


நல்ல ஒரு டிவைஸ் app தான் சார் இது



airfy Beacon from airfy on Vimeo.




Images:
www.kickstarter.com
neuerdings.com

கழுதைப்பால் 80 ஆயிரமா ?

உலகின் மிக உயர்ந்த பாலாடைக்கட்டி  "cheese" கழுதை பாலில் இருந்து தயாரிக்க படுகிறது




பால்க்கன் கழுதைகள் - இது செர்பியா நாட்டில் உள்ள பால்க்கன் மலையை சார்ந்தவை, எனவே இந்த பெயரில் அழைக்க படுகிறது . ஒரு கழுதை நாள் ஒன்றிற்கு 3 முறை பால் தரக்கூடியவை .


பால்கள் அனைத்தும் எந்த வித இயந்திரத்தை பயன் படுத்தி கறக்கபடுவது இல்லை, பால்கள் அனைத்தும் வேலை ஆட்களை கொண்டே கறக்கபடுகிறது



சுமார் 25 லிட்டர் பாலினை 1 கிலோ கட்டியாக மாற்றப்படுகிறது. இந்திய ரூபாய் மதிப்பின் படி சுமார் 80து ஆயிரம் வரை ஒரு கிலோ பால்கட்டி விலை போகிறது.



நமக்கு ஆவின் பால் போதும் சார்  :)





Images:
www.fresher.ru
www.messynessychic.com

Wednesday, 3 September 2014

சுவிட்சர்லாந்த் - உலகிலேயே சுத்தமான குழாய் தண்ணீர் / Good tap water only in Swiss

சுவிட்சர்லாந்த் - உலகிலேயே சுத்தமான குழாய் தண்ணீர் சுவிட்சர்லாந்த் நாட்டில் தான் கிடைக்கும். அந்த தண்ணீர் கனிம நீருக்கு சமமாக இருக்கிறது

கனிம நீர் - Mineral Water.


மேலும் ச்விச்ஸ் வாசிகள் குழாய் தண்ணீரையே குடிபதற்கு உபயோகித்து வருகின்றனர்.

நம்ம ஊர்ல உப்பு தண்ணீயே வரமடீங்குது சார் :)


எங்கு பசுமை இருக்கிறதோ அங்கு நல்ல மழை இருக்கும், எங்கு நல்ல மழை இருக்கிறதோ அங்கு நல்ல மரங்கள் பசுமை நிறைந்து இருக்கும்.





நமக்கு வரும் தண்ணீர் அனைத்தும் அணைக்கட்டுகளில் இருந்து தான் வருகிறது , அணைகளில் இருந்து நம் வீட்டிற்கு வருவதற்குள் 60% தண்ணீர் நோய் கிருமிகளால் பாதிக்கபடுகிறதுகாரணம் நாம் தண்ணீர் பயன் படுத்தும் விதம்.


இயற்கை நமக்கு அனைத்தும் தருகிறது, அதை சரியான வழியில் பயன் படுத்துவது அவசியம்.


தண்ணி லாரி வர டைம் ஆகிடுச்சு :)




 Image: 
genesisnanotech.wordpress.com
 

ஹோட்டலில் பறிமாறும் இயந்திர மனிதர்கள்

இயந்திர மனிதன்

ஹஜிமே ரோபோட் "Hajime Robot" தாய்லாந்து உணவகம்


இது தாய்லாந்தில் இருக்கும் ஊர் ஜப்பானிய உணவகம். இதில் பணிபுரியும் அனைவரும் இயந்திர மனிதன் தான். வாடிகையாளர்களை வரவேற்பது, அவர்களின் ஆர்டர் கலை பெறுவது, உணவை பரிமாறுவது போன்ற வேலைகளை செய்கிறது.






சாமுராய் வீரர்கள் - போல ரோபோட் அனைத்திற்கும் உடைகள் குடுக்கபட்டுள்ளன.



இந்த நிறுவனத்தின் ஓனர் இந்த ரோபோடுகளை 70 லட்சம் வரை கொடுத்து வாங்கியுள்ளார்.


சரி ஏன் இவ்ளோ செலவு பண்ணி ரோபோட்டலாம் வச்சு ஹோட்டல் நடத்துறார்? 
மெசின் மாதிரி வேலை செய்ய தான் சார், ரோபோடுகளுக்கு ஓய்வு தேவையில்லை, போனஸ் வேண்டாம், சம்பளம் இல்லை, புரணி பேசாது, நண்பக தன்மை என பல நன்மைகள் இருக்கு சார்.





சாப்பிட்டபின்  உற்சாகம் செய்ய ரோபோட் ஒரு குட்டி டான்ஸ்  போட்டுவிடுகிரதாம்.



உண்மையா இப்படிலாம் இருகான்னு கேட்குறீங்களா? 
அமாம் சார் இருக்கு. வீடியோ வை பார்க்கவும்





Images:
 www.ealuxe.com, youtube.com, travel.spotcoolstuff.com

Tuesday, 2 September 2014

மீன் முட்டை 10 லட்சமா?

அல்மாஸ் கேவியர் - Almas Caviar


அல்மாஸ் - என்பது தங்கத்தை குறிக்கிறது
கேவியர் - மீன்களின் முட்டை

அப்ப தங்க மீன் முட்டையா?

டைனோசர் காலத்தில் இருந்து இந்த மீன் இனம் இருக்கிறது.
சராசரியாக ஒரு பவுண்ட் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை விற்பனையாகிறது 








சரி ஏன் எது இவ்ளோ காஸ்ட்லி? 
மேட்டர் இனானா இந்த வகை மீன்கள் முட்டையிடும் பருவத்தை அடைய 20 ஆண்டுகள் ஆகுமாம் 



இந்த அல்மாஸ் கேவியர், ஈரானில் மட்டும் தான் தயார் செய்யபடுகிறது . மேலும் இதை லண்டனில் மட்டும் தான் வாங்க முடியும், உலகத்தில் இந்த ஒரே ஒரு கடையில் தான் இது கிடைக்கும் "The Caviar House and Punier"




சரி புக் செய்யலாமா? 
இப்பவே பண்ணுங்க அப்பதான் 4 வருடம் கலித்து கிடைக்க வாய்ப்பு இருக்கு.



Images:
themoscowtimes.com
weareprivate.net


தண்ணீர் பழம் வெறும் 4 லட்சம் தாங்க

Densuke Watermelon/ டென்சுகே வாடேர்மேலோன் - இந்த வகை பழம் ஜப்பானில் உள்ள ஒரு தீவில் "ஹொக்கைடோ" வளர்கின்றது


சாதாரண தண்ணீர்-பழத்தை போல் அல்லாமல் நல்ல கருமை நிறத்தில் இருக்கும், மேலும் வெளிப்புறத்தில் எந்த கோடும் இருப்பதில்லை.








சரி மேட்டர்க்கு வருவோம், இது எவ்ளோ? 
ஜஸ்ட் 4 லட்சம் தன் சார் :), இந்த காசுக்கு நா ஒரு தோப்பையே விலைக்கு வாங்கிருவேன் :)




ஏன் இவ்ளோ காஸ்ட்லி? 
இந்த வகை பழம் ஒரு வருடத்திற்கு 65ந்து தான் காய்க்குமாம்.. ஓ அப்டியா




Images:
blogs.westword.com
delish.com



Monday, 1 September 2014

ஆளை அறுத்து போடும் மீன் | Sting Ray

ஆளை அறுத்து போடும் மீன்.. இந்த வகை மீன்கள் "ஸ்டிங் ரே" என்று அழைக்கபடுகிறது. ஸ்டிங் - என்றால் கொடுக்கு என்று அர்த்தம்.

இது தனது வாளால் பிற விலங்கினங்களை கொள்கிறது. கீழ் உள்ள புகை படத்தை பாருங்கள் அதின் கத்தி போன்ற வாளை

நாம் அனைவரும் கீழ் உள்ள மனிதரை "நேஷனல் Geoographic"சானலில் பார்த்திருப்போம். இவர் முதலை, பாம்பு, வஸ பூச்சிகளை இலாவகமாக புடிப்பார்.. இவர் இந்த மீன் குத்தியதால் தான் உயிர் இழந்தார்

Steve Irwin



இது அவரின்  நெஞ்சுப்பகுதியை குத்திக் கொன்றது

திருக்கை மீன் தான் ஸ்டிங் ரே வா ?








அதிக விலை போன டைட்டானிக் கப்பலின் புதையல்கள்

நாம் அனைவரும் டைட்டானிக் கப்பலை பற்றி நன்கு அறிவோம். அதில் பயணம் செய்த 2224 மக்களில் 1514 மக்கள் உயிர் இழந்தனர். சாரா சரியாக 68% விழுகாடு மக்கள் பலியாகினர். இந்த கப்பல் பிரிட்டிஷ் நாட்டுக்கு சொந்தமானது, 15 ஏப்ரல் 1912 பனிக்கட்டியில் மோதியதால் எது இந்த பெரும் சீரழிவுக்கு ஆளானது.

அப்படி மூழ்கிப்போன கபளிளிருது பல பொருட்கள் எடுகபட்டன, அந்த பொருட்கள் அனைத்தும் ஏலத்திற்கு விடப்பட்டது. அதிகபட்சமாக ஒரு வைர வளையல் 12.1 கோடி வரை விற்று இருக்கிறது


அதிகமான விலைக்கு விலைபோன பொருட்கள் கீழே வருமாறு:




10. கேப்டன் "Edward John Smith"நின் சுருட்டு பெட்டி – 24,18,000  (24 லட்சம்)


Image: most-expensive.com


9. முதல் கப்பல் தள திட்டம் - 29,62,050 (29 லட்சம்)




Image: lasotrasinfografias.com



8. காப்புச்சட்டை - 33,24,750 (33 லட்சம்)


Image: amhistory.si.edu



7. கடைசியாக எடுக்கப்பட போட்டோ  - 60,45,000  (60 லட்சம்)


Image: www.paulfrasercollectibles.com



6. உணவுப்பட்டியல் -  75,56,250  (75 லட்சம்)



Image: www.huffingtonpost.com



5. கப்பலில் தூங்கும் அறையின் சாவி  - 83,42,100  (83 லட்சம்)


Image: junecaldwell.wordpress.com



4. சாவிகொத்து - 88,86,150 (88 லட்சம்)


Image: www.telegraph.co.uk



3. பை கடிகாரம்  - 93,09,300  (93 லட்சம்)


Image: shineyourlight-shineyourlight.blogspot.com



2. கப்பல் திட்ட வரைபடம்-  2,18,82,900 (2.18 கோடி)


Image: titanic-honor-and-glory.tumblr.com



1. வைர வளையல் - 12.1 கோடி 


Image: most-expensive.com

5 அபத்தமான விலையுயர்ந்த பொருட்கள் (விர்கபட்டவைகள்)

கரப் வான் பைபர்-காஸ்டெல் பெர்பெக்ட் பென்சில்: 8 லட்சம்

உலகின் மிக விலையுயர்ந்த பென்சில் 2008 ல் ஜெர்மனி ல் உருவாக்கப்பட்டது, 240 வயதான ஆலிவ் மரம் மற்றும் 18 காரட் வெள்ளை தங்கம் முலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. உள்ளமைக்கப்பட்ட அழிப்பி மற்றும் பென்சில் ஷர்பெநேர்  உள்ளடக்கம்
99 பென்சில்கள் மட்டுமே தயாரிக்கபடுள்ளது



தங்க சட்டை: 1.5 கோடி

உலகின் மிக விலையுயர்ந்த சட்டை ஒன்றை வாங்கி உள்ளார் ஓர் இந்தியர். "Datta Phuge" 'தங்க மனிதன்' என்ற செல்லப்பெயர் அவருக்கு உண்டு
சடையின் மதிப்பு சுமார் $235,000, இந்திய மதிப்பின் படி  1.5 கோடி ரூபாய் . 100,000 மின்மினிப்புகள் மற்றும் 6 ஸ்வரோவ்ஸ்கி படிக பொத்தான்கள் உள்ளடக்கம்
Image: http://wardrobetrendsfashion.com/



கழிவறை பேப்பர்: 14 லட்சம்

22 காரட் தங்க கழிப்பறை காகிதம் ஒரு ஆஸ்திரேலிய நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது "கழிவறை பேப்பர் மேன்/Toilet Paper Man"
யார் இதலாம் use பண்றது ???
Image: http://toiletpaper.com.au



நாயா? ஆமாங்க நாயேதான்: 1.5 கோடி

சிவப்பு, திபெத்திய நாய் "Big Splash"  "தங்க முடி நாய்" - 31 அங்குல உயரம் மற்றும் 180 பவுண்டுகள் நெருங்கிய எடையுள்ளதாக இருக்கும்.இது சிங்க வகை இனத்தை சார்ந்ததாக சொல்லப்படுகிறது
அரிதான மற்றும் பழமையான இந்த வகை நாய்  சீனாவில் ஒரு "பிரிமியம் செல்ல நாய் fair" 1.5 கோடி ரூபாய்க்கு  விற்கப்பட்டது
Image: http://petschoices.org





புத்தகம்: 3.5 கோடி

லியோனார்டோ டாவின்சி  இன் இந்த  புத்தகம்  பில் கேட்ஸ் சால் 1994 ஆம் ஆண்டு வாங்கப்பட்டது   பில் கேட்ஸ் யார்னு தெரயும்ள? அப்ப அவர் வாங்கலாம். மொத்தம் 72டு பக்கங்கள் கொண்டது இந்த புத்தகம்
லியோனார்டோ டாவின்சி  இன் கண்டுபிடிப்புகள், சிற்பங்கள், ஓவியங்கள், மற்றும் தத்துவங்கள் நுண்ணறிவு போன்றவைகள் இந்த புத்தகத்தில் உள்ளது
Image: http://classicbookreader.wordpress.com