Wednesday, 5 November 2014

ஓநாயும் ஆட்டுகுடியும் - மிஸ்கின்- wolf and the goat

நான் ரிசித்த படங்களில் ஒன்று "ஓநாயும் ஆட்டுகுடியும் ", தமிழ் சினிமால வந்த படங்களில் இது  வேறு கோணம். படம் முழுக்க விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லை .




படம் முழுக்க இளையராஜா சார் வருகிறார், ஒரு இசை கோலம், இசைலையே ஒரு சில காட்சிகள் அமைகபட்டன. ஒரு படம் வெற்றிபெற நடிகர் தேர்வு மிக அவசியம், A டு Z இதில் வருகிற கதாபாத்திரங்கள் அனைவரும் அந்த பாத்திரத்தில் பொருந்துகிறார்கள்.



ஒரு மருத்துவ கல்லூரி மாணவர் எப்படி இருப்பார்  "In Reality" நு பாத்தா , அவர் இந்த படத்தில் வரும் "Sri" ஸ்ரீ மாதிரியே தான், நான் மருத்துவ கல்லூரி விடித்திக்கு சென்றதுண்டு, 50% மாணவர்கள் போதை பயன்படுத்துவது வழக்கம். நான் ஏன் என்று கேட்டதும் உண்டு. நாம் படிபத்தற்கும் அவர்கள் படிப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு, அவர்கள் தங்களுடைய தேர்வு நாட்களில் ஏதேனும் ஒரு போதை வஸ்துகளை பயன்படுத்துவார்கள், அப்போதான் concentration இருக்குமாம் :) 

இந்த படத்தில் வரும் CBI ஆபிசர் நச்சுனு அதுக்கு போருந்துறார். ஆனால் அதில் வரும் அந்த கண்தெரியாத பெண்மணி சற்று அந்த கதா பாத்திரத்தில் பொருந்தவிலயொனு நினைப்பேன். 

அந்த சிறு குழந்தை "கார்த்தி" , "Edward அண்ணா" / "ஒரு கத சொலுங்களே நு" சொல்ற இடங்கள் மென்மையா இருக்கு.




மிஸ்கினின் இடங்கள்:

எனக்கு மிஸ்கின் சார் ரொம்ப பிடிக்கும் அவருடைய படங்களை நான் தவறாமல் பார்த்துவிடுவேன்.  இந்த ஓ ஆ படம் ரொம்ப இஷ்டம்.

அவர் தன்னுடைய படங்களில் தவறாமல் ஒரு ஊனமுற்றோரை பயன் படுத்துவார். ஒரு மஞ்சள் பாட்டு கண்டிப்பாக இருக்கும் ஆனால் "ஓ ஆ" படத்தில் ஒரு பாடல் கூட இல்லை, இந்த படத்திற்கு அது தேவையும் இல்லை.



ஒரு இடத்தில மிஸ்கின் சார் தனது துப்பாக்கியை அந்த கண்தெரியாத தந்தையிடம் கொடுபார், ஆனால் அவர் வானத்தை நோக்கி சுடுவார்... கண்ணில் தண்ணீர் வந்து விட்டது. படம் முழுக்க ஒரே களேபரி, என்ன நடக்குதுனே புரியல, மிஸ்கின் சார் வர்ற அந்த கல்லறை காட்சி வரை. இந்த கல்லறை கட்சிக்கு பின்பு தான் அனைத்தும் புரிந்தது. 

படம் முழுக்க விறுவிறுப்பு - படத்தில் எப்படியும் ஒரு 50 பேர் சுடபட்டிருபார்கள், ஒரு சில சாவு சிரிப்பும், ஒரு சில சாவு கண்ணீரும் தந்தன.

படம் முழுக்க மிஸ்கின் சார் பேசுவதே இல்லை, அந்த கல்லறை காட்சியில் மொத்தமாக கொட்டிடுவார், அப்படி ஒரு நடிப்பு, வசனம், இசை, ஒளிப்பதிவு, அனைத்தும் என்னை அழவைத்தது. ஒரு 7 நிமிடத்தில் படத்தின் அணைத்து கதை, ஏன் இந்த படத்திற்கு "ஓநாயும் ஆட்டுகுடியும் " என்ற பெயர் வந்தது அனைத்தையும் சொல்லிவிடுகிறார். மிகவும் அருமையான இடம் அது. நீங்கள் இந்த காட்சியில் உருகவில்லை என்றால், உங்களயும் சுட்டுவிடலாம் :)





மிஸ்கின் சார் படத்தின் பெயர்கள் சற்று வித்தியசமாக இருக்கும்: உள்ப்  (Wolf), லால், தம்பா இந்த படத்துல வட்சுருபார்.

சண்டை கட்சிகளை ஒரு வேறு கோணத்தில் காட்டுவதில் மிஸ்கின் சார் வல்லவர், ஒரு துப்பாக்கியை சுடுவதில் இருந்து, தன்னுடைய பெல்டினால் சண்டைபோடுவது வரை.


படத்திற்காக:

இந்த படத்தில் அனைத்தையும் ரீயாலிடினு சொல்லமுடியாது, தம்பா கூட வர 2டு அடிஆட்கள், டப்பு டப்பு-நு நம்ம போலீஸ்-காரர்களை சுடுவது, ட்ரைன்ல இருந்து குதிப்பது, ட்ரைன்-ன ஹிஜாக் செய்வது. ஆனால் கண்டிப்பா சினிமாக்கு இது தேவை, சோ இது இல்லாட்டி சுவாரசியம் இருக்காது.

மிஸ்கின் சார் அடுத்த படத்துகாண்டி வைடிங் "Waiting"

ஆரோகியமா படத்தை ஆதரிக்கவும் 
















Tuesday, 4 November 2014

உலகத்தில் இன்னும் ஆதிவாசிகள் இருக்கிறார்களா ? - The Isolated peoples of the world





உலகத்தில் இன்னும் ஆதிவாசிகள் இருக்கிறார்களா ? 

ஆம் இருக்கிறார்கள், அதுவும் இந்திய நாட்டிற்கு உட்பட்ட பகுதியில் 




உலகத்தோடு தொடர்பில்லா மக்கள் 





நாம் அனைவரும் அந்தமான் நிகோபார் தீவின் பெயரைப் பற்றி கேள்வி பட்டிருப்போம், அந்த தீவுகளில் வசிக்கும் பழங்குடி மக்கள் தான் இந்த "செண்டிநிலி" Senteneli இனத்தவர்கள், இவர்கள் இன்று வரை எந்த ஒரு வேறு இட மனிதர்களை தங்கள் இடதிர்ற்குள் அனுமதிப்பது இல்லை. மீறி நுழைந்தால் மரணமே 


இந்திய மக்கள் தொகை கணக்கின்படி 21 ஆண் 18 பெண், ஆகா மொத்தம் 39 மக்கள் வாழலாம் என்று சொல்கிறது. ஆனால் வேறு சிலர் சுமார் 500 ருக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கலாம் என்று சொல்கிறார்கள் 


 72 கிலோமீட்டர்  (17,800 ஏக்கர்) பரப்பளவில் இவர்கள் வசிக்கிறார்கள்


வேட்டையாடுதல், மீன்பிடித்தல், மற்றும் காட்டு தாவரங்கள் உன்னுதல் - போன்ற பழக்கங்களை கொன்றவர்கள்.








ஆனால் அவர்கள் நெருப்பினை பயன்படுதுகிரர்களா? என்பது தெரியாது, அவர்கள் என்ன மொழியை பயன் படுத்துகிறார்கள் என்பதும் தெரியாது, ஏனென்றால் அவர்கள் யாரையும் அவர்களின் தீவிற்குள் அனுமதிப்பது இல்லை .


செண்டிநிலி மட்டும் அல்ல ஆப்ரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளிலும் சில ஆதிவாசி பிரிவிகள் இன்றும் வசிக்கின்றன 

கேமரா தூக்கிட்டு அங்கேயும் போய்டாதேங்க!!!! அவர்களாவது இந்த அசிங்கம் புடித்த உலக (நம்) வாழ்கையை பற்றி தெரியாமல் இருக்கட்டும்.




இந்த வீடியோ வ பாருங்க, இந்த காடுவசிகளை காண செல்லும் நம் மக்கள், ஆனால் அவர்களை நெருங்க முடியவில்லை